Header Ads



கவர்ச்சிகர சலுகைகள் வரலாம், அவற்றால் ஏமாற வேண்டாம் - பணத்தையும், சொத்துக்களையும் இழந்து விடாதீர்கள்


சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரித்துள்ளார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பொது மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனிப்பட்ட தகவல்களை அறியாதவர்களுக்கு வழங்க வேண்டாம்.


குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதி பத்திர இலக்கம், அவற்றின் பிரதிகளுடன், வங்கி கணக்கு விபரங்களையும் வழங்க வேண்டாம்.


விசேடமாக வங்கி கணக்கு தொடர்பில் குறுந்தகவல் ஊடாக பெறப்படும் OPT இலக்கத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் யாருக்கும் வழங்க வேண்டாம்.


பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகள் வரலாம், அவற்றால் ஏமாற வேண்டாம் என பொலிஸார் சார்பில் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.


இவ்வாறான மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.


எனவே இது போன்ற நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.


உங்களுக்கு அடையாளம் தெரியாதவர்களிடம் சிக்கி சொத்துக்களை இழக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.