ஆளும் கட்சியினரை இன்று, அவசரமாக சந்திக்கும் ஜனாதிபதி
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று -28- நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் பொதுமக்களால் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள விசேட மீளப் பெறும் உரிமைகள்,நாணயம், வைப்புக்கள்,கடன்கள், கடன் பாதுகாப்பு முறிகள், காப்புறுதி, ஓய்வு ஊதியம், தரப்படுத்தப்பட்ட உத்தரவாதங்கள், ஏனைய செலுத்த வேண்டிய கணக்களின் வைப்புக்கள் இவை அனைத்தையும் பாதிக்கும். அவற்றில் நியாமான அளவு குறையும் அபாயம் இருக்கின்றது. பொதுமக்கள் இது பற்றிய தௌிவுகள் பெறும் வாய்ப்புகள் ஏற்படுத்தாமல் மூன்று நாட்கள் பிறகும் ஒரு நாள் முந்தியும் வந்த வங்கி விடுமுறைகளை வௌ்ளிக்கிழமை பலவந்தமாக வங்கிகளை முடக்கி இந்த நாடகத்தை அரங்கேற்க அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டு முடிவடைந்து விட்டது. ஆனால் நிச்சியமாக பொது மக்களை நேரடியாகப் பாதிக்கும் இந்த அநியாயத்தை பொது மக்கள் எதிர்த்து நிற்கும் பட்சத்தில் அரசாங்கத்தால் அவற்றை செயற்படுத்துவதில் பல சிக்கல்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும். ஆனால் தற்போது இந்த நாடகத்தின் மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டுவது தான் ரணிலின் திட்டம். எதிர்காலம பற்றி அரசாங்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டால் இந்த சூழ்ச்சியை முறியடிக்கலாம். அது நடக்குமா? பொறுததிருந்து பார்ப்போம்.
ReplyDelete