"இன்றிரவே ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்"
தேர்தலை நடத்தவில்லை என்றால் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து மாகாணசபைகளை கலைத்துவிட வேண்டும்.
மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென தெரிவிக்கும் ஆளுங்கட்சி எம்.பி ரோஹித அபேகுணவர்தன, இல்லை என்றால் மாகாணசபை முறைமையை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாது மாகாணசபைகள் இயங்கி வருகின்றன.
எனவே, தேர்தலை நடத்தவில்லை என்றால் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து மாகாணசபைகளை கலைத்துவிட வேண்டும்.
எதிர்க்கட்சி தயார் என்றால், அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நொவம்பர் மாதத்துக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும்.
அதற்கு முன்னர் ஜனாதிபதி நினைத்தால் பொதுத்தேர்தலை நடத்த முடியும்.
இன்றிரவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பாராளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதியால் செல்ல முடியும்.
அதில் அவருக்கு எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தித் தலைப்பின் பொருள், சனாதிபதி நாளை பிரதேச சபைத் தேர்தலை வைக்கின்றார் என்பது போன்றதாகும்.
ReplyDelete