கொழும்பில் ஜப்பானிய போர்க் கப்பல் (படங்கள்)
ஜப்பான் கடல்சார் தன்னியக்கப் படைக்கு சொந்தமான 'இகாசுச்சி' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கை வந்தடைந்துள்ளது.
இலங்கையை நோக்கி கடந்த ஒரு வார காலத்துக்குள் மாத்திரம் மேற்குலக மற்றும் அண்டை நாடுகளில் இருந்து தொடர்ந்து கடற்படை கப்பல்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இலங்கை வருகை தந்துள்ள ஜப்பான் கடற்படை கப்பலை கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி கடற்படையினர் வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 150.5 மீற்றர் நீளமும், 207 தங்குமிடங்களும் கொண்டது.
கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் காலத்தில் அதன் கடற்படை அணி நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Post a Comment