Header Ads



கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக சவுதி அறிவிப்பு - விலை அதிகரிப்பு


கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.


அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார்.


ஏற்கனவே நாளாந்தம் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகனின் ஓபெக் கூட்டமைப்பு ஏழு மணி நேரம் சவூதி அரேபியா அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.


இதனையடுத்து எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்க உடன்பாடு ஏற்பட்டதாக சவூதி அரசு அறிவித்துள்ளது


அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஒரு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது.


ப்ரெண்ட் கச்சா எண்ணெ பீப்பாய் ஒன்றின் விலை 77.64 அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில், எதிர்காலத்தில் 1.51 அமெரிக்க டொலரிலோ அல்லது 2% இல் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.