நீண்ட விடுமுறை வழங்கியது ஏன்..? மத்திய வங்கி ஆளுநர் கூறும் காரணம்
இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக, எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ட
இதனை இன்று (25) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் செயல்பாட்டில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியின் வைப்புத்தொகைக்கும் மற்றும் வட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை இவர் சீர் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்த எமக்கு மற்றுமொரு ஏமாற்றம் காத்திருக்கின்றது.இந்த நபர் எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு அழகான காரணம் கற்பித்து பொதுமக்களை மாடாக்குவதில் மாத்திரம் திறமையானவர். ஐந்து நாட்கள் தொடர்ந்து இலங்கையில் வங்கிகளை மூடிவைத்துவிட்டால் கடன் சீரமைப்பு சீரடைந்து விடும் என இந்த நபர் கூறுவது, சென்ற மத்திய வங்கி கவர்னர் கப்ரால், எவ்வளவு பணம் அச்சடித்தாலும் பணவீக்கம் ஏற்படமாட்டாது என பொதுமக்களிடம் கண்கட்டி வித்தை காட்டியது போல்தான் இருக்கின்றது. கண்ணை மூடிக் கொண்டு அந்த பிரதமர் என்ற நபர் தான்தோன்றித்தனமாக எந்த யோசனையுமில்லாது வியாழன் விடுமுறையானதால் வௌ்ளியும் விடுமுறை கொடுத்துவி்ட்டு உலகை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம் என்ற யோசனையில் வௌ்ளியையும் விடுமுறையாக்கி வர்த்தமானி வௌியிட ரணில் இங்கிலாந்திலிருந்து வந்து இறங்கியதும் இதைப்பார்த்து அந்த பிரதமர் என்ற நபரைத் திட்டித் தீர்த்தபோது இரவோடு இரவாக அந்த மத்திய வங்கி கவர்னருக்கு தொலைபேசி மூலம் நிலைமையைச் சமாளிக்குமாறு கேட்டதற்கு இணங்க கண்ணை மூடிக் கொண்டு அந்த நபரும் கடன் மறுசீரமைப்புக்கு ஐந்து நாட்கள் வங்கிகளை மூடிவிட்டால் சிறப்பாக அதனை நிறைவேற்றலாம் எனக்கூறும் இந்த மட்டையிடம் கேட்க வேணடும் வங்கிகளை மூடி ஊழியர்கள் வீட்டில் படுத்துக் கொண்டு நாட்டின் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக செயற்படுத்தலாம் என்றால் இந்த நாடு எவ்வளவு மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை சற்று பாருங்கள். இது போன்ற கழுதைத்தனமான பேச்சுக்களை பொதுமக்கள் ஒரு போதும் வாசித்துவிட்டு மௌனமாக இருக்காமல் உடன் செயற்பட்டு இது போன்ற கள்ளக்கூட்டத்தை வௌியேற்ற உடன் செயற்பட வேண்டும். இந்த நாட்டின் உயர் அதிகாரிகளின் பேச்சுக்களைப் கேட்டும் போது இரவு நன்றாக மூத்தரத்தைக் குடித்து விட்டு பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் விடும் செய்தி இவை என பொதுமக்கள் கதைக்கின்றார்கள். கேவலம் இந்த நாடு உலகில் சர்வதேச அங்கொட பிஸ்ஸாவாக இந்த வீணாப் போன மந்தி(ரி)கள் கூட்டம் நாட்டை மாற்றியிருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலம் மௌனமாக இருப்பது.
ReplyDelete