கால்களை மறைக்கும் நீண்ட, ஆடைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
பாடசாலை நேரங்களில் மாணவர்களை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கை, கால்களை மறைக்கும் வகையிலான நீண்ட ஆடைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் டெங்கு ஒழிப்பு தொடர்பான மேல் மாகாண உப குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சும் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் 44,500 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment