கண் இமைக்கும் நேரத்தில் உருக்குலைந்த ரெயில்கள் - விபத்து நேர்ந்தது எப்படி...?
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.
ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் சென்றன. மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
Post a Comment