Header Ads



மகிந்த கஹந்தகமகே கைது


 கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.


புறக்கோட்டை நடைபாதை வர்த்தகர் சங்கத்தின் தலைவரான மகிந்த கஹந்தகமகே, பொதுஜன பெரமுனவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமாவார்.


கொம்பனித் தெருவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது


முறைப்பாட்டாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடித்தடுப்பு பொலிஸார் மகிந்த கஹந்தகமகேவை கைது செய்து கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.


இதனையடுத்து அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.