Header Ads



மொஸ்கோவிற்கு விமானத்தை ஓட்டவிருந்தவரின், உடல் கட்டுநாயக்கவில் மீட்பு


ரஷ்ய தேசிய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்தின் துணை விமானி கட்டுநாயக்கவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என சந்தேகிக்கப்படுவதாகவும், பிரேத பரிசோதனை நேற்று நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஆதாரங்களின்படி, 63 வயதான பைலட், மொஸ்கோவிற்கு ஏரோஃப்ளோட் விமானத்தின் துணை பைலட்டாக மீண்டும் செல்ல இருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.