Header Ads



திருட்டுத்தனமாக கொண்டுசென்ற பொருட்களை, மீண்டும் இலங்கையில் ஒப்படைக்கும் நெதர்லாந்து


ஒல்லாந்தர் ஆட்சியின் போது (1656-1796) இலங்கையில் இருந்து நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட விலைமதிப்பற்ற ஆறு பழங்கால ஆயுதங்கள் மற்றும் கலைப் பொருட்களை இலங்கைக்குத் திருப்பித் தருவதாக டச்சு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.


பாரம்பரிய சிங்கள சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பீரங்கி, லெவ்கே திசாவேக்கு சொந்தமான வைரம் பொறிக்கப்பட்ட வாள்-கஷ்கொட்டை மற்றும் பிற ஆயுதங்கள் என்பன இவற்றுள்  அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க நெதர்லாந்து அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கையையடுத்து நெதர்லாந்து அரசாங்கம் இந்தப் பழங்காலப் பொருட்களை இலங்கைக்கு மீள ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.


இந்த தொல்பொருட்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நெதர்லாந்து அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள விசேட அறையில் வைக்கப்படும் எனவும் தற்போது அதற்கான அறை கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.


மேலும், காலநிலையால் தொல்பொருட்கள் சேதமடையாத வகையில் பொருத்தமான “காலநிலை கட்டுப்பாட்டு அறை”யை உருவாக்கத் தேசிய அருங்காட்சியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்த அறையின் நிர்மாணப் பணிகள் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதுடன், கலைப்பொருட்கள் ஒக்டோபர் முதல் வாரத்தில் நாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பழங்கால பொருட்களில் வெள்ளி, தங்கம் மற்றும் நகைகள் பதிக்கப்பட்ட ஒரு வெண்கல பீரங்கி, ஒரு மரத் துப்பாக்கி வண்டி, 136 வைரங்கள் பதித்த ஒரு திடமான தங்க கஷ்கொட்டை (chestnut ), நன்றாகச் செதுக்கப்பட்ட மர கைப்பிடிகள் கொண்ட இரண்டு துப்பாக்கிகள், ஒரு இரும்பு வாள் ஸ்கார்பார்ட், ஒரு கில்டட் சிறிய துப்பாக்கி பீப்பாய் மற்றும் ஒரு வெண்கலத் துப்பாக்கி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.