Header Ads



மைத்திரிபால் மன்னிப்பு வழங்கிய விவகாரம்


ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா என்பவருக்கு முன்னாள் ஜனாதிபதி, பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குறித்த மனு இன்று (12) உயா் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா உள்ளிட்ட மூவரடங்கிய உயா் நீதிமன்ற நீதியரசா்கள் ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.


அங்கு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சமா்ப்பணங்களை முன்வைத்தார்.


இதனையடுத்து , மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிா்வரும் 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த வழக்கில் அநியாயம், இலஞ்சம், நீதிக்கு எதிரான செயல்பாடுகளுக்கு மிகவும் சரியான நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.