Header Ads



அல்லாஹ்வின் மீது, நல்லெண்ணம் கொள்வோம்...


فعن أبي هريرة  رضي الله عنه ، أنَّ رسول الله صلى الله عليه وسلم قال: «إن حسن الظن بالله تعالى من حسن العبادة» رواه أبو داود والترمذي.

அண்ணல் நபிﷺ அவர்கள் நவின்றார்கள், அல்லாஹ்வின்_மீது_நல்லெண்ணமகொள்வது அழகான வணக்கத்தில் ஒ்ன்று. நூல்:திர்மிதி


அருளாளன் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வதென்றால், அல்லாஹ்வின் விதிகள் அனைத்தும் நன்மைக்கே என எண்ணுவதும், நம்புவதுதான்.


நமக்கேதேனும்  கடுமையான துன்பம் ஏற்படும் போது நிராசையடையாமல், இதெல்லாம் என் தலைவிதி என சலிப்படையாமல், இரட்சகனின் செயல்கள் அனைத்தும் நன்மைக்கே என எண்ணவேண்டும்.


அமீருல் முஃமினீன் உமர்(ரழி) அவர்கள் சொல்கிறார்கள், எனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதில்  அல்லாஹ்வின் மூன்று கருணையைப் பார்க்கிறேன்,


முதலாவதாக,

அல்லாஹ் என் மீது இலேசான துன்பத்தைத் தான் தந்துள்ளான், அவன் நினைத்தால் இதைவிட கடுமையான துன்பத்தைத் தந்திருக்கலாம். அப்படி செய்தவற்கு அவன் ஆற்றலுள்ளவன்தான்.


இரண்டாவதாக,

இந்தத்துன்பத்தை என்னுடைய உலக விடயத்தில் ஏற்படுத்தியுள்ளான், நல்வாய்ப்பாக எனது மார்க்க விடயத்தில் இந்த சோதனை ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வதற்கு அவன் சக்தியுள்ளவன்.


மூன்றவதாக, 

இந்தத் துன்பத்திற்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவான். இவ்வாறே எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டு இப்படி ஆகிவிடுமோ,அப்படி ஆகிவிடுமோ என சிந்திக்கவும் கூடாது. நிச்சயமாக அல்லாஹ் நன்மையை செய்வான் என நம்பவேண்டும்.


من حِكَم الخليفة الرّاشد عمرَ بن الخطاب رضي الله عنه

وروى إبراهيمُ بنُ الأزرقِ في كتاب تسهيل المنافع في الطّبّ والحكمَة أنّ عمرَ بنَ الخطاب رضي الله عنه قال: "ما أُصِبتُ بمصِيبةٍ إلا ورأيتُ لله عليّ فيهَا ثلاثَ نِعَم الأُولى أنّ الله هوَّنها عليّ فَلم يُصِبني بأعظَمَ منها وهو قَادرٌ على ذلكَ، الثّانيةُ أنّ الله جعَلَها في دُنيَاي ولم يجعَلها في دِيني وهو قَادرٌ على ذلكَ، والثّالثةُ أنّ الله يؤجِرُني بها يومَ القيامة".

اللهم لا تجعل مصيبتنا في ديننا

عِلْمُ الدِّينِ طريقُ الجنّةِ

இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயி


No comments

Powered by Blogger.