Header Ads



ராட்சத மீன் தாக்கியதா..? ஏதேனும் மர்மம் நிகழ்ந்ததா..?? சில பாகங்கள் மீட்பு


ரைற்ரானிக்(Titanic) கப்பலை பார்வையிட 5 பேருடன் கடலின் அடிக்கு சென்ற ரைட்டன் submarine இன் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர கடற்படை சற்றுமுன் அறிவித்துள்ளது.


1912ம் ஆண்டு 2224 பேருடன் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய Titanic கப்பலை பார்வையிடுவதற்காக அதிநவீன நீர் மூழ்கிக் கப்பலில் சுற்றுலா பயணிகள் 5 பேர் சென்றனர். ஒருவர் தலா ரூ.2 கோடி கொடுத்து இந்த பயணத்தை மேற்கொண்டனர்


இந்நிலையில், பயணம் தொடங்கிய ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நீர்மூழ்கி கப்பலுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.


இதையடுத்து, அந்த கப்பல் எங்கு சென்றது, அதில் உள்ளவர்களின் நிலை என்ன என எந்த விபரங்களும் தெரியவில்லை. இருந்தபோதிலும், 96 மணிநேரம் நீர்மூழ்கி கப்பலுக்குள் ஒக்சிஜன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


இதன் காரணமாக, அமெரிக்கா, கனடா நாடுகள் இணைந்து நீர் மூழ்கிக் கப்பலை தீவிரமாக தேடி வருகின்றன. இதனிடையே, இந்த நீர்மூழ்கிக் கப்பலில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டதால் இதன் தொடர்பு அறுந்துபோக வாய்ப்பே இல்லை என அதனை வடிவமைத்த நிறுவனம் கூறியுள்ளது.


ஆழ்கடலில் மிகப்பெரிய ராட்சத மீன் ஏதாவது தாக்கி இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மர்மமான விஷயம் நடந்திருந்தால் மட்டுமே அந்த நீர்மூழ்கி கப்பல் வழிதவறி சென்று மாயமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.


இவ்வாறு பல கதைகள் குறிப்பிட பட்ட நிலையில், குறித்த submarineஇன் சிதைவுகள் என சந்தேகிக்கபடும் பாகங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவிப்பு ஒன்றை சற்றுமுன்னர்வெளியிட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.