ஹர்ஷ டி சில்வா எந்தப் பக்கம்..?
- Siva Ramasamy -
ஹர்ஷ டி சில்வா சிறந்த பொருளாதார நிபுணர்.
அவரை பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக்கினார் ரணில்.
அந்த கோட்டா கோ கம போராட்டம் தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு நல்லது.. அதனை தொடரவிடுங்கள் என்று கூறிய ரணில் , அதே பாணியில் தான் , எதிர்க்கட்சிகளை மதிப்பது போல பாராளுமன்ற நிதிக்குழுவுக்கு எதிர்க்கட்சி எம்.பியை தேர்ந்தெடுத்தார்.
அதுவும் அரசாங்கத்தை விமர்சித்துத் தள்ளிக்கொண்டிருந்த ஹர்ஷாவை.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை தெரிவிக்கிறது.
அதன்பின்னர் சில மணி நேரங்களில் சஜித்தை பக்கத்தில் வைத்துக்கொண்டே அந்த யோசனைக்கு தனது குழுவின் ஆதரவை வழங்குகிறார் ஹர்ஷ.
இன்று ஆதரவை வழங்கிய ஹர்ஷ , நாளைய பாராளுமன்ற விவாதத்தின் பின்னரான வாக்கெடுப்பில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவாரா ? அல்லது நடுநிலை வகிப்பாரா ?
ஐக்கிய மக்கள் சக்தியினை பிரிக்கும் ரணிலின் தந்திரம் அமைதியாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஏன் ரணிலின் யோசனையை ஆதரித்தீர்கள் என்று ஹர்ஷவை வரலாறு ஒருநாள் கேட்குமாயின் , போர்க்காலத்தில் மஹிந்தவை ஆதரித்த கரு ஜயசூரிய சொன்ன பதிலே வெளிப்படும்..
‘ நாட்டுக்காக...’
Post a Comment