டயானா கமகே குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் ரிட் உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பின் அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படவிருந்தது.
எனினும் குறித்த தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகிய நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஒசத ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானி குடியுரிமையை கொண்டுள்ளதால் அவருக்கு இந்நாட்டின் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு தகுதி இல்லை என்ற தீர்ப்பினை வழங்குமாறு கோரி அவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment