Header Ads



கள் எலியா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரே, துரோகம் செய்யாதீர்கள்


கள் - எலியா மகளிர் அரபிக் கல்லூரியில் 2001  வரை அதிபராக இருந்தவர் அங்கேயே படித்து வெளியேறிய ஒருவர் அங்கே ஏற்பட்ட சில அசௌகரியங்கள் காரணமாக அமைதியாகச்சென்று விட, உப அதிபராக இருந்தவர் அதிபரானார்.


இவர் அரபு மொழி, ஷரீஆக் கல்வி கற்றவரல்ல என்பதால், அதன் பெறுமதியை, அதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்க மாட்டார் போலும்.


அதனால், அரபு  மொழியிலும் ஷரீஅத் துறையிலும் எதிர்பார்க்கப்பட்ட  முன்னேற்றம் இல்லாமல் இருந்திருக்கிறது.


இந்த நிலையில் தான், தற்போதைய அதிபரை மறைந்த  தலைவர் வரவழைத்து, பிரதி அதிபராக நியமித்திருக்கிறார். 


கல்லூரியில்,HR Policy அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 60 வயதைத் தாண்டியோர்  வேலையிலிருந்து   நின்று கொண்டது போன்று இவரும் நின்று கொள்ளவே பிரதி அதிபராக இருந்தவர் அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


தலைவர் அவர்களின் மறைவுக்குப் பின்,  கல்லூரியில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக தற்போதைய நிர்வாகத்தினர், அதிபரைத் காரணமின்றி, அநியாயமாக இடைநிறுத்தி, முன்னாள் அதிபரைப் பதில் அதிபராகக் கொண்டுவந்திருக்கிறார்கள்.


தற்போதைய அதிபருக்கு உள்ளே சென்று பணிபுரியும் வாய்ப்பை நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்து அதிபர் உள்ளே சென்ற பின்னரும், முன்னாள் அதிபர் அங்கே இருந்து கொண்டு, அதிபருக்கு இடைஞ்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக  அறிகிறோம்.


ஒரே நேரத்தில் இரு அதிபர்கள்..?


நிர்வாகம் அதிகாரப் போட்டியில் இருக்க, அவர்களுக்குக் கீழ் உள்ளவர்கள் அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாக வேலை செய்தால், அங்கே படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?


தம் அமானிதங்களான பிள்ளைகளை நம்பி அனுப்பியுள்ள பெற்றாருக்கு நிர்வாகம் செய்யும் பெருந்துரோகமல்லவா இது...?


இதைக் கவனிப்பவர்கள் நம் சமூகத்தில் இல்லையா..?


- நலன் விரும்பி -

No comments

Powered by Blogger.