பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெறுவது குறைகிறது
ஜப்பானில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைந்துள்ளது. டோக்கியோ, ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது. இதனால் வரும் 2030-க்குள் ஜப்பானின் மக்கள்தொகை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என அஞ்சப்படுகிறது.
அதிகமான ஜப்பானின் மக்கள்தொகை 16 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2070ஆம் ஆண்டு அதிகளவில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால் ஜப்பானில் தேரவாத பௌத்தம் மக்களிடையே பரவலாக பின்பற்றப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் அடிப்படை நம்பிக்கை பணம் சம்பாதிப்பதில்தான் இருக்கின்றது என்பதை இது தௌிவாகக் காட்டுகின்றது. இறைநம்பிக்கையற்ற சடவாத சமூகத்தில் இதைத் தவிர வேறு மேலதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
ReplyDelete