Header Ads



இத்தனை வீதமானவர்கள் ரணில், ஜனாதிபதி வேட்பாளராகுவதை விரும்புகின்றனரா..?


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்றும் அவருடைய தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்ரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார்.


இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவதையே விரும்புகின்றனர்.


ராஜபக்சக்களில் எவரும் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.


கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவங்களை எவரும் மறக்காமல் இருந்தால் நல்லது.


ரணில் விக்ரமசிங்கவைப் பலப்படுத்த அனைவரும் கட்சி வேறுபாடின்றி இணைய வேண்டும் என வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.