புத்தளத்தில் மாடுகளை வேட்டையாடிய, முதலை தூண்டிலில் சிக்கியது
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் மாடுகளை வேட்டையாடி வந்த 9 அடி நீளமான பாரிய முதலையொன்று தூண்டிலில் சிக்கிய நிலையில் நேற்றைய தினம்(22.06.2023) மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குளத்தில் குளிக்கச் சென்ற வேளை, தூண்டிலில் சிக்கியிருந்த முதலையை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து கருவகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச மக்கள் தகவலை வழங்கியுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் தூண்டிலில் சிக்கியிருந்த முதலையை கிராம மக்களுடன் இணைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும், முதலையின் வாயில் தூண்டில் சிக்கியிருந்ததாகவும் இதன்போது முதலை காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட முதலையை சிகிச்சையளிப்பதற்காக நிகாவெரெட்டிய மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment