சனத் நிஷாந்தவை திட்டிய கோட்டாபய
உர விவகாரம் தொடர்பான உண்மை நிலவரத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விளக்கிய போது “இதற்கு ஆதரவளிக்க முடியாவிட்டால் வாயை மூடிக் கொள்ளுங்கள்” என திட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
புத்தளத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கு உரையாற்றிய சனத் நிஷாந்த,
“அண்மைக் காலமாக நாடு சில பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தற்பொது அரச இயந்திரம் நன்றாக உள்ளது. பொருட்கள் விலை அதிகம். அவை கேள்விகள். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஏனென்றால் நான் கிராமத்தைச் சேர்ந்தவன். கிராமத்தில் உள்ள குடும்பங்கள் படுகின்ற, துன்பம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த பிரச்சினைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று நான் தெளிவாகக் கூறுகிறேன்.
இப்போது விவசாயியிடம் உரம் உள்ளது. கடற்றொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். பால் பண்ணையாளர் அந்தப் பொருட்களைத் தயாரிக்கிறார்.
நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும் போது, பொருளாதாரம் தானாக உருவாகும். எனவே இதற்கு ஜனாதிபதிக்கும் விவசாய அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டதால் கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக ஞாபகம். அங்கு ஒரு கடற்றொழிலாளரான சகோதரர் காணாமல் போனார்.
அன்றைய தினம் ஜனாதிபதி மகிந்தவுக்கு சரியான தகவல் வழங்கப்பட்டிருந்தால் அந்த உயிர் போயிருக்காது. என்.ஜி.ஓ. அப்போதும் பொய் பிரசாரம் செய்து நாட்டை குழப்பினர். இன்றும் அது நடக்கிறது.
ஆனால் தலைமுடியை வளர்த்த அயோக்கியர்களை மீண்டும் இந்த நாட்டை அழிக்க இடமளிக்க மாட்டோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.
இன்று எங்கள் கட்சி தொகுதி மாநாடுகளை நடத்தி மக்களுக்குத் தெரியப்படுத்துகிறது. கிராமத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுஜன பெரமுன முடிவடைந்து விட்டது எனப் பலரும் கூறினர்.
ஆனால் அப்படி எதுவும் இல்லை. பொதுஜன பெரமுன இன்று இருப்பதை விட பலமாக உள்ளது.
இன்று மக்களுக்கு உரம் கிடைக்கிறது. ஏழை மக்களுக்கு நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் நாம் அவற்றை முறையாகத் தீர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment