Header Ads



தஃவா பணிக்காக பல தியாகங்களை மேற்கொண்டு, சிறைவாசம் அனுபவித்த ஆதம்லெப்பை ஹஸ்ரத்.!


(ஏயெஸ் மெளலானா)


தஃவா பணிக்காக பல தியாகங்களை மேற்கொண்டு சிறைவாசம் கூட அனுபவித்த காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும் மத்ரஸத்து ஷபிலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் அதிபருமான ஆதம்லெப்பை ஹஸ்ரத் அவர்களின் மரணச் செய்தி கவலையளிக்கின்றது என்று மருதமுனை ஜம்இயத்துல் உலமா தெரிவித்துள்ளது.


ஜம்இய்யாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மெளலானா, செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.முஜீப் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;


மத்ரஸத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் தன்னுடைய ஆயுட் காலத்தில் இஸ்லாமிய ஷரீஆவை நடைமுறைப்படுத்துவதில் பாரிய பங்களிப்பை இலங்கையின் கல்விச் சேவையின் ஊடாக வழங்கியுள்ளார்கள். 


காத்தான்குடியில் ஷரீஆவை  நிலைநாட்ட சிறைவாசம் சென்றது மட்டுமல்லாமல் பல்வேறு தியாகங்களையும் செய்ததோடு அல்லாஹ்வின் பாதையில் தஃவா பணிக்காக பல தியாகங்களோடு பணியாற்றிய பின், ஜாமியு ஷபிலுர் ரஷாத் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து அதன் வழர்ச்சிக்காக அயராது உழைத்தவருமாவார்.


இஸ்லாமிய சமூகம் மார்க்க நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும், மார்க்க விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், தன்னால் முடியுமான பங்களிப்புக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  ஆற்றிய ஹஸ்ரத் அவர்கள், இன நல்லிணக்கத்திற்காகவும் தன்னை அதிகம் அர்ப்பணித்த ஒருவராகவும் விளங்குகின்றார்கள்.


அன்னாரின் மரணம் காத்தான்குடிக்கு மாத்திரமல்ல, முழு நாட்டிற்கும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.


அன்னாரின் அரிப்பணிப்புகளையும் சேவைகளையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களின் கபுறுடைய வாழ்வை ஒளிமயமாக்கி

மேலான ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக..


மேலும், அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும், ஆறுதலையும் வழங்குவானாக.


இவ்வாறு மருதமுனை ஜம்இயத்துல் உலமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.