குருநாகலில் ஈதுல் அல்ஹா, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
குருநாகல் பறகஹதெனியாவில் அமைந்துள்ள ஜாமிஉத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பறகஹதெனிய அரபுக் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருநாள் தொழுகையினை மௌலவி சமீம் மதனி அவர்களும் விசேட குத்பா பேருரையினை மௌலவி எஸ். எச். எம். இஸ்மாயீல் அவர்களும் நிகழ்த்தினர்.
ஆயிரக்கணக்கான ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இக்பால் அலி
Post a Comment