இலங்கை விவகாரத்தில் தடுமாறுகிறதா கனடா..?
எனினும், கனேடிய வெளிவிவகார அமைச்சின் நிலைப்பாட்டுக்கும் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டுக்குமிடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுகிறது.
கனடாவின் பிரம்டன் நகர பேரவையால் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி இன அழிப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அவற்றின் நிலைப்பாடு மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகாதெனவும், கனடா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கனேடிய பிரதமரின் கருத்து எவ்வாறெனினும், கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதென்ற தொனியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கருத்து வெளியிட்டிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
கனேடிய பாராளுமன்றத்தில் மே 18ஆம் திகதியை தமிழ் இன அழிப்பு தினமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதெனவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. இது தொடர்பாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையில் தமிழர் இன அழிப்பு இடம்பெற்றதாக கண்டறியப்படவில்லையென, வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment