துறைமுக நகரத்தில் டொலர்களை கொட்டப்போகும் சீனா
கொழும்பு துறைமுக நகரத்தில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்சானுடன் பீய்ஜிங்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்றை நடத்திய நிலையில் இந்த முதலீடு குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் தலைவரையும் சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார, அரசியல், புவியியல்ரீதியாக கொழும்பை குறிப்பாக கொழும்பு கோட்டை உற்பட கேந்திர ஸ்தானங்களை சீனாவின் செல்வாக்கில் வைத்து இந்து சமுத்திர செல்வாக்கை முன்னெடுக்க சீனாவின் நீண்ட காலத்திட்டம் நனவாகப் போகின்றது. சீன ஹாபர் என்ஜினியரிங் ஏற்கனவே இந்த திட்டத்தை ஆரம்பித்துவி்ட்டது. இலங்கையைத் திட்டமிட்டு விழுங்கிக் கொள்ளும் சீனாவின் திட்டம் இந்த ஆள்பார்வை வௌிநாட்டு அமைச்சருக்கு விளங்குமா? அரசாங்கம் ஏன் இவ்வளவு மடத்தனமாக நடந்து கொள்கின்றது என்பது தான் பெரிய ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கின்றது. சீனாவின் 12 பில்லியன் டொலர்கள் இலங்கையின் உற்பத்திக்கு எந்த பங்களிப்பையும் வழங்காது. அதற்கு மாற்றமாக பயங்கர பணவீக்கத்தையும் பொருட்களின் விலை மிகவும் அதிகரித்து பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்வில் மிகப் பெரும் சுமையாக அமையப் போகிற்து. ஏற்றுமதியை மையமாக வைத்த எந்த உற்பத்திகளுக்கும் இந்த மென்டல் அரசாங்கம் எந்த முக்கியத்துவத்தையும் கொடுப்பதில்லை.
ReplyDelete