கத்திகுத்து தாக்குதல் பற்றி புத்தகம் எழுதும், ஒரு கண் பார்வையை இழந்த சல்மான் ருஷ்டி
இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது வாலிபர் ஒரு கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இந்த தாக்குதலில் அவர் ஒரு கண் பார்வையை இழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக சல்மான் ருஷ்டி கடந்த 20-ந் தேதி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம் எழுத போவதாக சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
என் மீதான தாக்குதல், என்ன நடந்தது மற்றும் அதன் அர்த்தம் என்ன, தாக்குதல் பற்றி மட்டுமின்றி அதை சுற்றியும் நடந்தது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுத முயற்சிக்கிறேன். இது ஒரு சிறிய புத்தகம். இது உலகில் எழுதுவதற்கு எளிதான புத்தகம் அல்ல. ஆனால் வேறு விஷயத்தை செய்ய நான் இதை கடந்து செல்ல வேண்டி உள்ளது என்றார்.
இவனுடைய கத்தி குத்து புத்தகத்தை எழுத முன்பு இவனைப் பிடித்து ஈரான் அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் ஒரு சைத்தானின் வரலாறு முடியவடையும். அது தொடர்வது எமக்கு அவசியமில்லை.
ReplyDelete