முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க புதிய எல்லை நிர்ணயம் அவசியம் - ஷாம் நவாஸ்
இதனால், நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களின் குடிப்பரம்பலை கணிப்பீடு செய்யும் களப்பணிக ளை சூரா கௌன்ஸில் ஆரம்பித்துள்ளதாக இதன் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
இப்பணியில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட் டோர் பங்கெடுப்பதன் அவசியத்தையும் ஷாம் நவாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பல்லின சமூகங்கள் மத்தியில், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளில், பிரதிநிதித்துவங்களாலேயே சமூக பாதுகாப்பை பலப்படுத்த முடியும்.
எமது இருப்புக்களையும் உள்ளூர் மற்றும் தேசியளவிலான பிரதிநிதித்துவங்களே உறுதி செய்கின்றன.
எனவே, நாடளாவிய ரீதியில் முஸ்லிம் வாக்காளர்கள், குடியிருப்புக்கள் இன்னும் நிலபுலன்களைக் கணிப்பிட விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பூர்த்தி செய்து சூரா கௌன்சிலுடன் தொடர்பு கொள்ளுமாறு முஸ்லிம்கள் கேட்கப்படுகின்றனர்.
விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை, சூரா கௌன்ஸிலுடன் இணைந்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியும் இணைந்து மேற்கொள்வதாகவும் ஷாம்நவாஸ் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் புதிய எல்லை நிர்ணய அறிக்கையை கையளித்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment