ஜப்பானில் இலங்கையர் வெண்கலம் பெற்றார்
தென்கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் முப்பாச்சல் போட்டியில் இலங்கை வீரர் மலித் யசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இப்போட்டியில் ஜப்பானின் மியாவோ மனாடோ தங்கப் பதக்கத்தையும், சீனாவை சேர்ந்த மா யிங்லாங் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment