Header Ads



இலங்கைக்கு மீண்டும் பறந்து வரவுள்ள Air China


சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.


அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையே விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


செங்டு தியான்ஃபு (Tianfu) சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் விமானங்கள் குறித்த தினங்களில் இரவு 08:55 க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.


அத்துடன், செங்டுவுக்கான விமானம் இரவு 10:15 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.