Header Ads



அடுத்த ஜனாதிபதி இவர்தான், 90 இலட்சம் வாக்குகளை பெறுவார்


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித தெவரப்பெரும தெரிவித்தார். 


அதோடு ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனை உடைய அரசியல்வாதி. ஆசியாவிலேயே மிகவும் சிறந்த ஆளுமை அவர் எனவும் தெவரப்பெரும கூறினார்.


உலகை ஆளக்கூடிய வல்லமைகூட ஜனாதிபதி ரணிலிடம் உள்ளதாக தெரிவித்த தெவரப்பெரும, ரணில் குடும்ப அரசியல் நடத்தியவர் கிடையாது என்றும் கூறினார்.


எமது நாட்டை நெருக்கடியில் இருந்து அவர் மீட்டார். மக்களுக்கும் இது தெரியும். எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் அமோக வெற்றிபெறுவார் எனவும் தெவரப்பெரும நம்பிக்கை வெளியிட்டார்.


அதேசமயம் சஜித் பிரேமதாசவும் கடைசியில் ரணில் பக்கம் வருவார் எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.