தாயிடம் பாலுக்காக சத்தமிட்ட 7 நாய்க் குட்டிகள் கொடூரமாக கொலை - பொலிஸ் விசாரணை ஆரம்பம்
ஒரு மாதம் நிரம்பாத ஏழு நாய்க்குட்டிகளை நபர் ஒருவர் தீயில் போட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், தவசிகுளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் வளர்த்து வந்த நாய் ஒன்று 7 குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகள் தாயிடம் பாலுக்காக சத்தமிட்டுள்ளன.
குறித்த சத்தம் தூங்குவதற்கு இடையூறாக இருந்தமையால் குறித்த நபர் கிடங்கு ஒன்றை வெட்டி அதில் தீமூட்டி இந்த ஏழு குட்டிகளையும் எரித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கும், மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கும் தொலைபேசி மூலம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment