தங்கம் கடத்திய பிரான்ஸ் நாட்டவர் சிக்கினார், 70 மில்லியன் ரூபா செலுத்தத் தவறினார் - 8 வரை கம்பி எண்ணுகிறார்
- Ismathul Rahuman -
சட்ட விரோதமாக 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்தி வந்த பிரான்ஸ் நாட்டவருக்கு சுங்க அதிகாரிகள் விதித்த 70 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்தத் தவறியதினால் இம்மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதிகாலை 6.30 மணிக்கு விமான மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயது டையவரின் பயனப்பொதியை பரிசோதித்த போது, அதில் மறைத்துவைத்திருந்த 4 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த தங்கப் பாலங்கள் கருப்பு நிற முலாமிடப்பட்டு "பொய்ல்" கடதாசியினால் சுற்றி பொதியின் கீழ்பாகத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் சுங்க அதிகாரிகள் கைபற்றியதாக தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் கைபற்றப்பட்ட தங்கத்தை அரசுடமையாக்கியதன் பின்னர் சந்தேகநபருக்கு சுங்க அதிகாரிகளினால் 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்தாததினால் சந்தேக நபரை நீர்கொழும்பு பதில் நிதவான் இந்திக்க செல்வி முன்னிலையில் 4ம் திகதி ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பிரதி சுங்க அத்தியட்சகர் ஏ.எம்.கே.டி. அதிகாரி சந்தேநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி வழக்கை நெறிப்படுத்தினார்.
Post a Comment