Header Ads



இன்றுமுதல் 60 வகையான மருந்துகளுக்கு விலை குறைப்பு - வர்த்தமானி வெளியானது


இலங்கையில் பலவகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.


இந்த விலை குறைப்பானது இன்றைய தினம் -26- முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.


புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 60 வகையான மருந்துகளுக்கு 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.