ஒடிசா ரயில் விபத்து - 60 பேர் பலி, 600 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.
உள்ளூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கும் வகையில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜேனா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரெயில் விபத்தில் 50 முதல் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் 200க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் உள்ளன. 30க்கு மேற்பட்ட் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
Post a Comment