Header Ads



50 இலட்சம் பணம் திருட்டு - பணிக்கு வந்து 15 நாட்களில் சம்பவம்


அவிசாவளை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட கொண்டு செல்வதற்காக வானில் வைக்கப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிக்கொண்டு தலைமறைவான வாகன சாரதி அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவிசாவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சாரதி பணிக்கு வந்து 15 நாட்களாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபருடன் திருடப்பட்ட சுமார் முப்பது இலட்சம் பணம், பணம் வைத்திருந்த பை, இரண்டு கைத்தொலைபேசிகள், நான்கு காசோலைகள் மற்றும் அந்த பணத்தில் அவர் வாங்கிய துணிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


அத்துடன் சாரதியுடன் சேர்ந்து திருட்டுக்கு உதவியதாகக் கூறப்படும் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். IB

No comments

Powered by Blogger.