Header Ads



41 நாடுகளுக்கு இலங்கையர்கள் வேண்டும்


இலங்கைக்கு 41 நாடுகளிலிருந்து 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிப்பத்திரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.


இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


இவ் வருடம் 3 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு திறன் மற்றும் மொழித்திறனை வளர்த்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றதென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.