தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 40 பதக்கங்கள் பெற்று சாதனை
(அஸ்ஹர் இப்றாஹிம் )
கடந்த சனிக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் த்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண கராத்தே போட்டியில், கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவர் சிஹான் முகம்மத் இக்பால் தலைமையில் பயிற்சி வழங்கப்படுகின்ற IMA சங்கம் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மொத்தமாக 40 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இதில் சிரேஸ்ட பிரிவில் ஏ.கே.எம்.ஹஸ்னத் கான் கறுப்பு பட்டி காத்தாவிலும், ஏ.எம்.இர்பான் கறுப்புப் பட்டி 84 கிலோ குமிதேவிலும், ஏ.எப்.ஏ.ஆஸிக் இலாஹி கறுப்புப் பட்டி 67கிலோ குமிதேவிலும், எச்.எம்.சஸீன் கறுப்புப் பட்டி 60கிலோ குமிதேவிலும், என்.எம்.உமைர் காதாதாவிலும்,குமிதேவிலும் எல்.ரீ.ஏ.லியனகே காத்தாவிலும் குமிதேவிலும், எம்.எம்.றிகாஸ் குமிதேவிலும், எம்.எச்.முர்சதீன் குமிதேவிலும், எஸ்.எச்.எம்.நவோதா குமிதேவிலும், எச்.எம்.இஸ்ஹான் ஹர்ஸனா குமிதேவிலும், ஜீ.டீ.பி.பிரஸாத் குமிதேவிலும், ராஜகருணா குமிதேவிலும் ,ஸீ.மதுபாஸிதா குமிதேவிலும், தாறுக்கா ஜயசிங்க குமிதேவிலும் தங்கப்பதக்கங்களையும் ,21 வயதுப் பிரிவில் ஐ.மிப்ராத் காத்தாவிலும் குமிதேவிலும் ,எம்.ஆர்.றுஸ்லி அஹமட் குமிதேவிலும், 13 வயதுப் பிரிவில் எம்.ஏ.அம்மார் காத்தாவிலும், எம்.ஐ.எம்.உமைர் காத்தாவிலும், எம்.ஆர்.எம்.றீஸா குமிதேவிலும் தங்கப் பதக்கங்களையும், 12 வெள்ளிப் பதக்கங்களையும், 06 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இதில் தங்கப் பதக்கங்களையும் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்ற மாணவர்கள் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment