சிங்கராஜா சரணாலயத்திற்கு அருகில் 3 ஈரானிய பிரஜைகள் கைது
சிங்கராஜா சரணாலயத்திற்கு அருகிலுள்ள லங்காகமவில் வனவிலங்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நாட்டுக்கு சுற்றுலா வந்த மூன்று ஈரானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் தாவர மாதிரிகள் பலவற்றுடன் மூன்று ஈரானிய பிரஜைகள் மற்றும் ஒரு இலங்கை சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் நெலுவ வனஜீவராசிகள் அலுவலகத்தினால் உடுகம நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெலுவ வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது செயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment