Header Ads



ஒரேநாளில் 2 பல்கலைக்கழக மாணவர்கள், உயிரை மாய்த்தது ஏன்..? யாழ்ப்பாணத்தில் பேரதிர்ச்சி


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் இன்று காலை பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேராதனைப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.


இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனை காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது.


யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சம்பவ இடத்துக்கு சென்ற நீதிபதி உடலை பார்வையிட்ட நிலையில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் மரணம் தொடர்பில் நுகே கொட காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையை மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இரு பிரபல பல்கலைகழகங்களில் ஒரே நாளில் உயிரை மாய்த்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ib

1 comment:

  1. உயர் கல்வி கற்க பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் பலர் இந்த வருடம் பல பல்கலைக்கழகங்களில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கொடூரமான, மனிதாபிமானமற்ற பகிடிவதைகளும் தொடர்கின்றன. இதன் இரகசியம் என்னவென்றால் நாம் ஏன் கல்வி கற்கின்றோம் என்பது மாணவர்களுக்குத் தெரியாது. ஏன் நாம் கல்வி கற்றுக் கொடுக்கின்றோம், அதன் இலக்கும் உண்மையான நோக்கமும் என்ன என்பது விரிவுரையாளர்கள் குறிப்பாக அரசாங்கத்துக்குத் தெரியாது. இந்த நிலையில் கல்வி கற்க பல்வேறு தியாகங்களைச் செய்து தூர இடங்களில்இருந்து வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்றால் அந்த விசாரணை இந்த விசாரணைகளுடன் பிரேதத்தை அடக்கம் செய்வதுடன் அனைத்தும் முடிவடைகின்றது. இந்த தற்கொலைகள் ஏன் நடைபெறுகின்றது என்பது பற்றி உரிய அறிஞர்களை அரசாங்கம் நியமித்து மிக ஆழமாக இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். அந்த ஆய்வுகள் இந்த கேடுகெட்ட மூன்றாம் உலகில் நடைபெறுவதில்லை. கல்வி கற்க முன்பு மாணவர்களும் விரிவுரையாளர்களும், நிர்வாகத்தில் உள்ள அத்தனை பேரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் அவரவர் தங்கள் பணிகளில் ஈடுபடும் சூழலும், நிலைமைகளும சரியாக உருவாக்கப்பட வேண்டும். அதை விட்டு எல்லாப் பிரச்சினைகளுக்கு மத்தியில் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.முதலாம் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய மதிப்பும் உரிய அந்தஸ்த்தும் வழங்கப்படுகின்றது. அவருடைய தேவைகள் உரிய முறையில் நிறைவேற்றப்படுகின்றன. முதலாம் மண்டல நாடுகளில் மனிதன் தலைக்கு மேல் வைத்து மதிக்கப்படுகின்றான். இந்த வீணாப்போன மூன்றாம மண்டல உலகில் மனிதன் காலுக்குக்கீழ் மிதிக்கப்படுகின்றான். இந்த நிலைமையில் இந்த நாடுகளில் எதையும் உருப்படியாக சாதிக்க முடியாது என்ற இரகசியத்தை அனைவரும் விளங்கி மனிதனுக்கு உரிய இடமும் அந்தஸ்த்தும் வழங்கி அவன் மதிக்கப்படும் போது பல்கலைக்கழகங்களும் அதன் உரிய பணியைச் சிறப்பாக முன்னெடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.