படுக்கையறைக்குச் சென்று துப்பாக்கியுடள் விளையாடிய 2 வயது சிறுவன் - குண்டு பாய்ந்து பலியான கர்ப்பிணி தாய்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா இல்க் (31). 8 மாத கர்ப்பிணியும் கூட. இந்நிலையில், லாரா இல்க் திடீரென தொலைபேசியில் போலீசாரை அழைத்து தனது 2 வயது மகனால் சுடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் லாராவின் வீட்டிற்கு சென்று பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
மகனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட லாரா, சிறுவன் தற்செயலாக சுட்டு விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். படுகாயத்துடன் கிடந்த லாராவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும், 8 மாத கருவும் பரிதாபமாக இறந்தது.
விசாரணையில், லாரா வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தபோது பெற்றோரின் படுக்கையறைக்குச் சென்ற சிறுவன் துப்பாக்கியை எடுத்து விளையாடும்போது துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவம் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment