2 மாணவிகளை காணவில்லை
மொனராகல, இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இந்த இரண்டு மாணவர்களும் நெருங்கிய நண்பிகள் என தெரிவிக்கப்பட்டது.
பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த 15ம் திகதி ஆஷானியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர் பாட்டி வீட்டில் வாழ்ந்து வருகின்றார். சிறு வயதிலேயே அம்மா அவரை கைவிட்டு சென்றுள்ளார் என தெரிவந்துள்ளது.
இந்த வீட்டில் பாட்டியால் பராமரித்து வரும் அஷானி, கடந்த 15ஆம் திகதி காலை மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு பவீஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து அது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நாளும், அதற்கு மறுநாளும் தங்கள் நண்பர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தியதாகவும் தாங்கள் கொழும்பில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணைகள்
அதற்கமைய, சம்பந்தப்பட்ட மாணவனை பொலிஸார் அழைத்து விசாரித்துள்ளனர். இந்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Post a Comment