மயக்க மருந்தினால் உயிரிழந்த 2 வயது குழந்தை
கடந்த மாதம் 23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டது. இதன்போது சத்திரசிகிச்சைக்காக மயக்க மருந்தினை உட்செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கமைய உட்செலுத்தப்பட்ட மயக்க மருந்து காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது.
இதன்படி சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் இதனால் குழந்தை உயிரிழந்ததாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னதாக இரண்டு தடவைகள் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள் மயக்கமடைவதற்காக வழங்கப்பட்ட மருந்தினால் உயிரிழந்துள்ளனர். மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணும் இவ்வாறு உயிரிழந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என அரச மருந்தாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது மிக முக்கியமான பாரதூரமான குற்றம். கொள்வனவு செயற்பாடுகளில் ஈடுபடும் சுகாதார அமைச்சின் பொறுப்பான அதிகாரிகளும் மந்திகளும் மருந்துகள் கொள்வனவில் பாரிய கமிசன் அடிப்பதற்காக தரம் குறைந்த மருத்துவ சபை அனுமதிக்காக மருந்துகளைக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து கோடான கோடி கமிசன் அடித்து பொதுமக்களின் பணத்தாலேயே பொதுமக்களை அநியாயமாகக் கொலை செய்யும் பெரும் பாவச் செயல்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் தொடருவது மிகப் பெரிய பாரதூரமான குற்றமாகும். இதற்கு சனாதிபதி, சுகாதார அமைச்சர், உரிய அதிகாரிகள், டாக்டர்கள் அனைவரும் பொறுப்பு. இத்தகைய அநியாயமான கொலைக்கு காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டத்தின் முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த அநியாயம், பாரிய குற்றச் செயல்கள் தொடர்வதை இந்த நாட்டு மக்கள் உற்பட யாரும் அனுமதிப்பதில்லை. அனுமதிக்கவே முடியாது.
ReplyDelete