Header Ads



ஒரு குடும்பத்திற்கு மாதச் செலவிற்கு, எவ்வளவு பணம் தேவை..? பிரதான செலவாக 2 விடயங்கள்


இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு செலவுகளுக்காக 76 ஆயிரம் ரூபாய் மாதாந்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அண்மைய அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதாந்த மொத்த செலவு 63,820 ரூபாவாக  காணப்பட்டது.


எனினும் இந்த ஆண்டில் குடும்பம் ஒன்றின் மொத்த செலவு  76124 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


குடும்பம் ஒன்றின் பிரதான செலவாக உணவு செலவுகள் காணப்படுவதாகவும் இந்த தொகையில் 53 வீதம் உணவிற்காக செலவிட நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


47 விதமான தொகை உணவு அல்லாத வேறு செலவுகளுக்காக தேவைப்படுவதாக பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.


இலங்கையில் சுமார் 60 விதமான குடும்பங்களில் மாத வருமானம் கடந்த 2022ஆம் ஆண்டோடு ஒப்பீடு செய்யம் போது இந்த ஆண்டில் குறைவடைந்துள்ளது.


மொத்த ஊழிய படையில் 20 விதமானவர்கள் தங்களது மொத்த வருமானத்தில் 50% வரையில் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


உணவு அல்லாத செலவுகளுக்காக செலவிடும் தொகையில் அதிக அளவில் தொகை, கடன் மீள செலுத்துகைக்காக இலங்கையர்கள் செலுத்துகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.


நாட்டின் பொருளதார வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் 11.5 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. twin

No comments

Powered by Blogger.