Header Ads



25 பேர் SJB யுடன், இணைந்து கொள்ள தீர்மானம்



ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த 25 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து மொட்டு கட்சியின் 25 பேர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தனிப்பட்ட ரீதியில் இந்த உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் தரப்புக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட இணங்கியுள்ளதாக அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.