Header Ads



இலங்கையில் துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (19)


துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நாளை(19) நடைபெறவுள்ளது.


நாளை(19) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிஇய்யத்துல் உலமா உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


தலைப்பிறை பார்த்த பின்னர் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் தினம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.