டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 18 சதவீதம் அதிகரிப்பு
இந்த ஆண்டு, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆண்டின் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த வாரம் ரூபாவின் பெறுமதி தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி ஜப்பானிய யென்னுக்கு நிகராக 27.06 சதவீதத்தாலும், பிரித்தானிய பவுண்டுக்கு நிகராக 12.01 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், யூரோவிற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 15.02 சதவீதத்தினாலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 17.01 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment