16 வயது சிறுமியுடன் 20 வயது இளைஞன் காதல் - சிறை சென்ற பெற்றோர்
16 வயதான மாணவியொருவர் மாயமானதாக பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
அதேவேளை ஏற்கனவே 20 வயதான இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பையடுத்து, சிறுமி அவருடன் சென்றிருந்தார்.
அதன்பின்னர் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பெற்றோர்களிடம் பிள்ளைகள் ஒப்படைக்கபட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஒரு மாதம் கழித்து, மீண்டும் சிறுமி மாயமாகியிருந்தார்.
சில நாட்கள் தலைமறைவாக இருந்த இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து கைதான சிறுமியையும் இளைஞரையும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்க உத்தரவிடப்பட்டதுடன், இளைஞனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டது.
அதேவேளை இளைஞனின் வீட்டிலேயே தாம் தங்கியிருந்ததாக இருவரும் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய, இன்று இளைஞனின் தாயும், தந்தையும் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
Post a Comment