ஆணாக வாழ ஆசைப்பட்ட 14 வயது, சிறுமியின் துயரமான முடிவு
ராகம – கந்தானை பகுதியில் ஆணாக வாழ ஆசைப்பட்ட 14 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுமி தான் ஆணாக வாழ ஆசைப்படுவதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் பெண்ணாக பிறந்து வாழ்வது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும், சிறுவனைப் போல் வாழ விரும்புகிறேன்’ என்றும் சிறுமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதோடு ஆண் நடிகர் ஒருவரை தான் அதிகம் விரும்புவதாகவும், ஆண் குழந்தையாக வாழ விரும்புவதாகவும் உயிர்ழந்த சிறுமி தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment