இம்முறை (ஹி.1444) அரபா தின உரையினை நிகழ்த்துபவர் இவர்தான்.
ஸவுதி அரேபியாவின் மூத்த ஆலிம்கள் சபையின் உறுப்பினரான அல்லாமா யுஸுப் (حفظه الله) அவர்கள் இஸ்லாமிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவராவார். மிகவும் இளம் வயதில் அல்குர்ஆனை மனனமிட்டதோடு பல்துறை சார்ந்த அடிப்படை நூல்களையும் மனனமிட்டார். இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹ்), அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷேய்க் (حفظه الله) போன்ற உலகின் தலைசிறந்த முன்னனி மார்க்க மேதைகளிடம் கல்வி கற்ற இவர் தனது உயர் கல்வியை அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைமாணி, முதுமாணி, கலாநிதி ஆகிய பட்டங்களை உயர்தர சித்தியுடன் பெற்றுக்கொண்டார். இஸ்லாமிய அகீதா மற்றும் சமகால பிரிவுகள், சிந்தனை முகாம்கள் என்பதை தனது சிறப்புத் துறையாகக் கொண்டுள்ள இவர் முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை ஏழுதியுள்ளார் அதில் சிலது அச்சிடப்பட்டுள்ளது.
ஹி. 1438ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு வருடங்கள் இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர், பல்கலைகழக ஆசிரியர், துறைத் தலைவர், முதுமாணி, கலாநிதி பயிளுனர்களுக்கான மேற்பார்வையாளர், பல்கலைக்கழக ஆய்வு நூல்களுக்கான தர விமர்சகர் , பல பல்கலைக்கழகங்களின் வருகை தரு விரிவுரையாளர், மன்னர் பஹ்த் குர்ஆன் அச்சகத்தின் மொழிபெயர்ப்புப் பகுதிக்கான தலைவர், என பல பரிமானங்களில் பணி செய்து பன்முக ஆளுமை கொண்ட ஷேய்க் அவர்கள் மதீனா மஸ்ஜித் அந்நபவி, மக்கா மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் ஏனைய பள்ளிவாயில்களின் ஆசிரியருமாவார், இருபது வருடங்களுக்கும் மேலாக பல பெருநாள் குத்பாக்களையும் வெள்ளிக்கிழமை குத்பாக்களையும் ஸவுதியின் பல பள்ளியிவாயில்களில் நிகழ்தியுள்ளதுடன், ஆய்வரங்குகள், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்ச்சி என எல்ல வெளிகளிலும் அறியப்பட்டவராவார்.
அந்நாரின் அரபா தின குத்பா வரலாற்றில் என்றுமில்லாத அளவு உலகின் 20மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட உள்ளது. அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வதோடு அவரின் உரையிலிருந்து அனைவரும் பயன் பெற உதவி செய்வானாக.
by; Ismail (madani)
Post a Comment