இம்ரான்கான் மீது 140 வழக்குகள்
சிறையில் அடைத்தாலும் ஒரு போதும் அடிபணிய மாட்டேன் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் பரிசுப்பொருள் வழக்கில் தனது பதவியை இழந்தார். அவர் மீது 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை சந்திக்க லாகூர் இல்லத்திற்கு சென்ற முன்னாள் தேசிய கால்பந்து வீராங்கனை சுமைலா சத்தார் உள்பட 30 பேரை கைது செய்தனர்.
இதை அறிந்த இம்ரான்கான் யூடியூப் வீடியோ மூலம் பேசியதாவது:
நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்காக தொடர்ந்து போராடுவேன். என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும், அரசிடம் சமரசமாக செல்லவோ அல்லது அடிபணியவோ மாட்டேன். மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு பேசினார்.
Post a Comment